திருமதி மகேஸ்வரி தியாகராஜா

​​தொல்புரத்தை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணம், கொட்டடி, சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தியாகராஜா அவர்கள் April மாதம் 10ம் திகதி, திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சீனிவாசகம், கண்மணி தம்பதிகளின் ஆசை மருமகளும், 
காலஞ்சென்ற சீனிவாசகம் தியாகராஜா(முன்னாள் பதிவாளர் – யாழ் கச்சேரி) அவர்களின்
அன்பு மனைவியும், 
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நவரத்தினம், சின்னத்துரை ஆகியோரின்
அருமைச் சகோதரியும்
சீனிவாசகம்(UK), நளாயினி(Australia), கமலாசினி(UK), ராகினி(Canada) ஆகியோரின்
பாசமுள்ள தாயாரும்
சத்தியா(UK), காலஞ்சென்ற கதிரேசபிள்ளை மற்றும் பிரகலாதன்(பிரபா) (Australia),அமரநாத்(ராசா) (UK), சிவக்குமார்(ராஜவர்மன்) (Canada) ஆகியோரின் அன்பு மாமியாரும்
தனுலக்‌ஷ்மி ராஜ்குமார்(Australia), தனுராஜ்(New Zealand), மயூரன் (UK) , யுகாந்தகி(UK), லக்‌ஷனா (UK), விசாகன்(UK), ஷரிணி(Canada) ஆகியோரின் அருமைப் பேத்தியும் தருண், தராணா(Australia) ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் இல. 384 Finley Avenue Ajax இல் அமைந்திருக்கும் Ajax Crematorium & Visitation Centre இல் April மாதம் 22ம் திகதி சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், பின்பு, மறுநாள் April மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் 10:30 வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து கிரியைகள் நடைபெற்று, மதியம் 12:00 மணிக்கு அதே முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு
ராகினி – மகள் : 416-551-8007 
சிவக்குமார் (ராஜவர்மன்) – மருமகன் : 647-719-8007

Share Button