சென்னை பேரிடர்

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், மாடிகளிலும், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், பெரும்பாலான பகுதிகளிலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர்.

மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வெள்ளத்தில் சிக்கி மாடிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, பெருங்குடி, தாம்பரம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, தேனாம்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர், திருவான்மியூர், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

சி எம் ஆர் ஊழியர்களும் தொண்டர்களும் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு  உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.

https://www.facebook.com/media/set/?set=a.766912496747634.1073741878.280718062033749&type=3

https://www.facebook.com/media/set/?set=a.766910263414524.1073741877.280718062033749&type=3

https://www.facebook.com/media/set/?set=a.765994450172772.1073741876.280718062033749&type=3