March 29, 2022 3:18 am

ஹீரோயின் ஆகும் தனுஷ் பட நாயகி.!

ஹீரோவின் தங்கை, ஹீரோயின் தோழி மாதிரியான கேரக்டர்களில் நடித்து வந்த அம்மு அபிராமி பேட்டரி படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஏற்கெனவே அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தாலும் அதில் பிளாஷ் பேக் காட்சியில் மட்டுமே வருவார். இதில் நாயகனாக செங்குட்டுவன் நடித்துள்ளார். இவர்களுடன் கன்னட நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி அறிமுகமாகிறார். மற்றும் யோக் ஜப்பி, எம். எஸ் பாஸ்கர், நாகேந்திர பிரசாத், அபிஷேக், ராஜ்குமார், ஜார்ஜ் மரியம், கிருஷ்ண குமார், ராம, பேபி மோனிகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார். தன் ஒரே மகளை கொலை செய்த கொலைகாரனை தேடி அலையும் அசிஸ்டன்ட் கமிஷனராக விக்டர் வருகிறார். இந்த மூன்று கதா பாத்திரங்களையும் இணைத்து சொல்லப்படுகிறது படத்தின் கதை.

கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது.

அதில் கற்று தேர்ந்தவர்கள், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியது போய், இன்று அதை பணம் சம்பாதிக்கும் வியாபார தளமாக்கி விட்டனர். சூது கவ்வும் தர்மத்தை, அதனிடமிருந்து மீட்கும் க்ரைம் த்ரில்லர் படமே பேட்டரி. பொதுவாக, க்ரைம் கதை என்றாலே எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இப்படத்தில் வரும் திருப்பங்கள், ஒரு புதிர் விளையாட்டு போல, ஏன்? எதற்கு? எப்படி? என்கிற ஆர்வத்தை தூண்டும் படியாக இருக்கும். என்கிறார் இயக்குனர் மணிபாரதி.

Share Button