April 27, 2022 2:50 am

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அழைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகவேண்டுமென ஸ்ரீலங்கா பொது பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய வகையில், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்து, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அனைத்துக் கட்சி பங்கேற்புடன் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு, ஒருமனதாக இணக்கம் காணப்பட்டுள்ளதென, சுயதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். குறித்த சந்திப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Share Button