March 5, 2022 12:39 am

மெல்பர்ன் கிரிக்கெட் மைதான அரங்கிற்கு ஷேன் வார்னே என பெயர் மாற்றம்.!

அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் தனது 52 வயதில் மாரடைப்பால்  நேற்று காலமானார். சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மறைவின் காரணமாக மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஒரு அரங்கிற்கு ஷேன் வார்னே பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிரேட் சதர்சன் (Great Sudarshan Stand) ஸ்டேண்ட் என்ற அரங்கின் பெயரை ஷேன் வார்னே என மாற்றப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சில தினங்களுக்கு முன் இறங்கிய வார்ன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகின்றது

ஷேன் வார்னே தனது வில்லா இல்லத்தில் சுய நினைவின்றி இருந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஷேன் வார்னே, 1992 முதல் 2007 வரையில் 145 டெஸ்ட் போட்டிகளிலும், 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வார்னே, நூற்றாண்டின் ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்கள் பட்டியலில் முதன்மை வகிப்பவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் உலகுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, ஷேன் வார்னேவின் மறைவுச் செய்தி அமைந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது வியத்தகு சுழற்பந்துவீச்சின் மூலம் மகத்தான பல சாதனைகள படைத்தவர் ஷேன் வார்னே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மகத்தான கிரிக்கெட் வீரருக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Share Button