November 27, 2017 5:30 am

மாவீரர்களை நினைவுகூர சிறிலங்கா அனுமதிக்க வேண்டும்- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

வடக்கு, கிழக்கில் போரில் இறந்தவர்களை சுதந்திரமாக நினைவு கூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவீரர் நாளை முன்னிட்டு, தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் போல் ஸ்கலி வெளியிட்டுள்ள அறிக்கையில்-”அச்சுறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்கள் இந்த ஆண்டும் தொடர்ந்து இடம்பெற்ற போதிலும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள், அழிக்கப்பட்ட கல்லறைகளை தூய்மைப்படுத்தும், நினைவுகூரும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

போரில் இறந்தவர்கள் தமிழர்கள் பகிரங்கமாக நினைவுகூருவதற்கு  சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். போர் முடிவுக்கு வந்த பின்னர், நினைவுகூரல் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் அச்சுறுத்தல்களை விடுத்து தடுத்து வந்துள்ளது.

போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் மந்தகதியில் இருப்பது கவலையளிக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழமையாகவும், காலவரையறையுடனும், நடைமுறைப்படுத்துமாறு, ஐ.நா உறுப்பு நாடுகளுடன் இணைந்து கோருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Share Button