May 26, 2021 4:35 am

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுநாள் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது.

சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் 1964 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி பிறந்தார்.

இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அவர், கடந்த ஆண்டு மே மாதம் 26ம் திகதி திடீர் மாரடைப்பால் காலமானார்.

இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.

ஆறுமுகன் தொண்டமான் 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

1993 ஆம் ஆண்டு கட்சியின் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார்.

முதற் தடவையாக 1994 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

அதன் பின்னர் அனைத்து நாடாளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்

Share Button