August 27, 2022 12:53 am

மக்களின் 75 சதவீத ஆதரவைப் பெற்று உலகின் பிரபலமான தலைவா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளாா்.

அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் ‘மோனிங் கொன்சல்ட்’ என்ற சமூக வலைதளம் உலக அளவில் மக்களின் ஆதரவு பெற்ற பிரபல தலைவா்களின் பட்டியலை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 17 முதல் 23 ஆம் திகதி நிலவரப்படி உலக அளவில் மக்களின் ஆதரவு பெற்ற தலைவா்களின் பட்டியலை அந்த வலைதளம் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் 75 சதவீத மக்களின் ஆதரவுடன் பிரதமா் மோடி முதலிடத்தில் உள்ளாா்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 41 சதவீத மக்களின் ஆதரவுடன் 9 ஆவது இடத்தில் உள்ளாா். பிரேஸில் ஜனாதிபதி ஜெயிா் பொல்சனரோவுக்கு 42 சதவீத மக்களும், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவுக்கு 38 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனா். கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 39 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்
மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் லோபஸ் ஓப்ரடாா் 63 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி 58 சதவீத மக்களின் ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனா்.

Share Button