April 1, 2021 3:31 am

போதைப்பொருளுடன் 25 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மைய நாட்களில் 25 இலங்கையர்கள் ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகளுடன் இந்தியா கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில், இந்திய கடலோர காவல்ப்படையினரால்  கைப்பற்றப்பட்ட இலங்கை மீன்பிடி படகுகள் குறித்து அதிகாரபூர்வ தகவலை இந்திய அதிகாரிகளிடம், இலங்கை கோரியிருந்தது. இந்தியாவினால் வழங்கப்பட்ட அறிக்கை கிடைத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையிலேயே 25 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், சிலாபத்திலிருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடி படகு மார்ச் 5 ஆம் திகதி இந்திய கடலோர காவல்படையால் ஆறு மீனவர்களுடன் கைப்பற்றப்பட்டது என்று அவர் கூறினார்.  அந்த படகில் 200 கிலோகிரோம் ஹெராயின் இருந்ததாகவும், கடலோர காவல்ப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதும், ஹெரோயினை அவர்கள் கடலுக்குள் வீசியதாகவும் குறிப்பிட்டார். மார்ச் 15 ஆம் திகதி 19 நபர்களுடன் மூன்று இலங்கை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன, ஒரு படகில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஐந்து ஏ.கே .47 துப்பாக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் தற்போது இந்தியாவில் காவலில் இருக்கின்றார்கள்.

Share Button