August 18, 2021 10:10 am

புனேவில் பிரதமர் மோடிக்கு பா.ஜ. கட்சி உறுப்பனர் ஒருவர் கோவில் கட்டியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்தவர் மயூர் முண்டே, 37 வயதான இவர் பா.ஜ., கட்சியில் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் புனேவில் உள்ள அவுந்த் என்ற பகுதியில் இவருக்கு சொந்த மான இடத்தில் இவர் பாரத பிரதமர் மோடிக்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.

பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டியதற்கு நன்றி தெரிவிக்ககும் வகையில் பிரதமர் மோடிக்கே கோவில் கட்டியுள்ளார். 6 அடி நீளம், 2.5 அடி அகலம், 7..5 அடி உயரத்தில் இந்த கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலுக்குள் பிரதமர் மோடியின் மார்பளவிலான சிலையை பொறுத்தியுள்ளார்.

இந்த கோவிலின் புகைப்படத்தை செய்தியாளர் அலிசேக் தனது ட்வீட்டர் பக்கத்ததில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் மயூர் முண்டே இந்த கோவிலுக்காக ரூ1.5 லட்சம் பணம் செலவு செய்து 6 மாதமாக இந்த கோவிலை கட்டினார்.

இதுகுறித்து முண்டே கூறும் போது : “பிரதமர் மோடி இந்த நாட்டிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆர்டிக்கள் 370 நீக்கம், ராமர் கோவில், முத்தலாக், போன்ற விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். என்னை பொறுத்தவரை ராமர் கோவிலை கட்டியவர் நிச்சயம் வணங்கப்பட வேண்டியவர் அதனாலேயே அவருக்கு கோவில் கட்டியுள்ளேன்” என கூறினார்.

இந்த கோவிலுக்காக அவர் ஜெய்பூரிலிருந்துசிவப்பு மார்பிளை கொண்டு வந்து இந்த கோவிலைகட்டியுள்ளார். அந்த மார்பிள் விலை தான் ரூ1.6 லட்சம் ஆகும். இந்த கோவில் உள்ள மோடியின் சிலையை பாதுகாக்க கண்ணாடி பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் பிரதமர் மோடியை பாராட்டி ஒரு பாடல் எழுதி அதையும் கோவிலின் அருகிலேயே வைத்துள்ளார்..

Share Button