July 24, 2020 8:50 am

புத்தாக்க அம்சங்களுடன் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் Huawei MateBook D15 மற்றும் MateBook 13

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், MateBook D15 மற்றும் Matebook 13 ஆகிய இரண்டினதும் அறிமுகத்துடன் லெப்டொப் அரங்கில் தனது கால்தடத்தை பதித்துள்ளது. இரண்டு லெப்டொப்களும் அழகாக வடிவமைக்கப்பட்ட காட்சிப் பொருட்கள் மட்டுமல்ல உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் புதுமையான அம்சங்கள் உட்பட பாராட்டுக்குரிய மேலும் பலவற்றை அவை வழங்குகின்றன. Huawei share மற்றும் multi-screen collaboration போன்ற சிறப்பம்சங்கள் அவற்றை வலு நிலையங்களாகவும், smart office எண்ணக்கருவை உருவாக்கும் சாதனங்களாக அவை உள்ளன.

Huawei MateBook D 15 மெல்லிய bezels உடன் மிரளவைக்கும் உலோக மேற்பரப்பு மற்றும் 87% screen to body விகிதத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. HDD கூடிய உடன் இதன் நிறை வெறும் 1.62 கிலோ கிராம்கள் என்பதுடன், தடிப்பு வெறும் 16.99mm என்பதால் இலகுவாக தூக்கிச் செல்லக்கூடிய, எளிய சாதனமாக இது உள்ளது. MateBook D 15 ஆனது 15.6 அங்குல full view திரையுடன் வருவதுடன், இதன் full HD IPS panel மற்றும் அதன் வர்ண வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் அம்சமானது கண்களுக்கு இதமான பயன்முறையை உள்ளடக்கியுள்ளதுடன், கடினமான பாவனைக்குகந்ததாகவும் உள்ளது. இந்த லெப்டொப்பானது மேம்பட்ட AMD Ryzen 5 3500U processor இனால் வலுவூட்டப்படுவதுடன், இது செயல்திறனை துரிதப்படுத்துவதுடன், மேம்படுத்தவும் செய்கின்றது. இந்த அதி சக்திவாய்ந்த Huawei MateBook 13 சாதனமானது Huawei laptop வரிசையையே மிளிரச் செய்வதுடன், இதன் புத்தாக்க அம்சங்கள் தொழில்சார் பணிகளுக்கு பன்முகத்தன்மையை சேர்க்கின்றன. மேலும் இந்த 13 அங்குல அதி மெல்லிய லெப்டொப்பானது 88% screen-to-body விகிதத்துடன் வருகிறது. இது ஒரு முழுமையான காட்சி அனுபவத்துக்கு உயிரூட்டுகின்றது.

இரு லெப்டொப்களும் Huawei PC சாதனங்களின் பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ள Huawei இன் தனித்துவமான multi-screen collaboration அம்சத்தை ஆதரிக்கின்றன. இது ஸ்மார்ட்போன் அறிவிப்புகளால் தொந்தரவு ஏற்படாமல் வேலையில் கவனம் செலுத்துவதையும், இரு சாதனங்களுக்கிடையில் கோப்புகளை இடம்மாற்றுவது போன்ற திறன்களைக் கொண்ட ஒரு சாதனத்தைப் பயன்படுத்துவதில் சௌகரியத்தையும், பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட்போன் திரையை மடிக்கணினியில் பிரதிபலிக்கவும் அனுமதிக்கிறது.

எங்கள் லெப்டொப் பிரிவில் Huawei MateBook D15 மற்றும் Matebook 13 ஆகியன மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும், ஏனெனில் அவை உற்பத்தித்திறனை மேம்படுத்த தேவையான அனைத்து நவீன அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளன. வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலோ எங்கிருந்து பணிபுரிந்தாலும், இந்த லெப்டொப்களின் புத்தாக்க அம்சங்கள் எப்போதும் தேவைப்படும் பணி அட்டவணைக்கு ஒரு உயிர்நாடியை வழங்குகின்றன. இந்த புத்தாக்க அம்சங்கள் தொழில்சார் வாழ்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், பயணத்தின் போதும், அன்புக்குரியவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் போதும், நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் வேளையிலும் என்றும் பயனுள்ளதாக இருக்கும், என Huawei Devices Sri Lanka இன் இலங்கைக்கான தலைமை அதிகாரி, பீட்டர் லியூ தெரிவித்தார்.

நீங்கள் ஒரு முக்கியமான பணியில் கவனம் செலுத்தும்போது, ​​மடிக்கணினி திரையில் இருந்தவாறே வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க அல்லது மெசேஜ்களுக்கு பதில் அனுப்ப Multi-screen collaboration அம்சம் உங்களை அனுமதிக்கிறது. அழைப்புகளுக்கு பதிலளிக்க, அல்லது அழைப்புகளை மேற்கொள்ள அல்லது மெசேஜ்களை அனுப்ப நீங்கள் ஸ்மார்ட்போனை எடுக்க வேண்டிய தேவையில்லை. அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மடிக்கணினி திரையில் காண்பிக்கப்படும் போது நீங்கள் உங்கள் அலுவலக பணிகளில் கவனம் செலுத்தலாம்.

Multi-screen collaboration ஸ்மார்ட்போனை ஒரு பெரிய திரையில் உபயோகிக்கும் சௌகரியத்தை வழங்குகிறது. மெய்நிகர் திரையானது அப்ளிகேஷன்களுடன் தொடர்பு கொள்ள, மவுஸைப் பயன்படுத்த உங்களை அனுமதிப்பதுடன், லெப்டொப் கீபோர்ட் மூலம் தட்டச்சு செய்வது மிகவும் வசதியானது. அதே திரையில் இருந்து இரு சாதனங்களுக்கிடையில் கோப்புகளை இடம்மாற்றுவது உங்கள் பணிகளை இலகுவாக்கின்றது. இதன் multi-screen collaboration அம்சமானது, உங்கள் லெப்டொப் மற்றும் ஸ்மார்ட்போனுக்கு இடையில் copy and paste செய்வதை இலகுவாக்கியுள்ளதுடன், notes அப்ளிகேஷன்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லெப்டொப்பில் உள்ள அனைத்து புகைப்படங்கள், வீடியோக்கள், ஓடியோ கோப்புகள் மற்றும் பிற ஆவணங்களை உடனடியாக ஒழுங்கமைக்கவும், சேமிக்கவும் இது உங்களை அனுமதிக்கிறது, இதன் மூலம் லெப்டொப்பிலிருந்து அவற்றை அணுகுதல் மிகவும் சௌகரியமாக இருக்கும். மிக முக்கியமாக, கோப்புகள் இரண்டு சாதனங்களிலும் தானாகவே சேமிக்கப்படும். இது ஒரு சாதனத்தில் கோப்புகளை இழக்கும் கவலையை நீக்குகிறது.

Huawei MateBook D15, ரூபா.149,999 ஆக விலையிடப்பட்டுள்ளதுடன், Matebook 13ஆனது Intel மற்றும் AMD ஆகிய இரண்டு வகைகளில் கிடைப்பதுடன், Huawei Matebook 13 இன் விலை Rs. 224,999 என்பதுடன், Huawei MateBook 13 AMD ரூபா.179,999 ஆக விலையிடப்பட்டுள்ளது. இந்த லெப்டொப்கள் Singer விற்பனை நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட மீள்விற்பனையாளர்கள் மற்றும் Daraz.lk இணையத்தளத்தின் ஊடாகவும் கிடைக்கின்றது.

Share Button