August 24, 2020 12:05 pm

நடிகை சரண்யாவின் தந்தை காலமானார்

நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும்,  பிரபல இயக்குனருமான  ஆண்டனி பாஸ்கர் ராஜ் தனது 95 ஆவது வயதில் காலமானார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு  மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆண்டனி பாஸ்கர் ராஜ் மலையாள திரையுலகில் பிரபல இயக்குனராக விளங்கினார். மலையாளத்தில் 65 படங்களை இயக்கியுள்ள இவர்  தமிழில் துள்ளி ஓடும் புள்ளி மான் மற்றும் கை நிறைய காசு ஆகிய இரண்டு படங்களை இயக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button