June 19, 2021 3:17 am

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவோருக்கு 160,000 ஆணுறைகள்.!

ஜப்பானின் டோக்கியோ நகரில் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகளுக்காக 160,000 ஆணுறைகளை இலவசமாக வழங்குவதற்காக இம்முறை ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், ஒலிம்பிக் இடம்பெறும் கால எல்லையினுள்,  குறித்த ஆணுறைகளை பயன்படுத்துவதற்கு எந்தவொரு வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் ஆணுறைகளை, ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுபெற்றதன் பின்னர் வீர, வீராங்கனைகள் நினைவுசின்னமாக எடுத்துச்செல்வதற்கு அனுமதியளிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கொவிட் பரவல் நிலைமை காரணமாக, ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள் உடல் ரீதியான தொடர்பினை பேணுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்படும் அனைவரும் சமூக இடைவெளி தொடர்பான வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என தேசிய ஒலிம்பிக் சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share Button