August 16, 2021 4:34 am

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியை முன்னாள் வீரர் கணித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஒரு ஐசிசி கோப்பை கூட வென்றுகொடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிவரை முன்னேறித் தோற்றது. அடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, இறுதிப் போட்டிவரை சென்று தொற்றது. இதனால், கேலி மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

அடுத்து, டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. இதிலும் கோலி கோப்பை வென்றுகொடுக்கவில்லை என்றால், அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதனால், கோப்பை வெல்ல கோலி தலைமையிலான இந்திய அணி தீவிரமாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி:

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட உத்தேச இந்திய XI அணியை முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி கணித்துக் கூறியுள்ளார். அவரது அணியில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் ரெகுலர் ஓபனர்களாகவும், ஷிகர் தவனை மாற்று ஓபனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் மிடில் வரிசை வீரர்களாக இடம்பெற்றுள்ளார்கள்.

ரவீந்திர ஜடேஜா, ஹார்திக் பாண்டியா இருவரும் ஆல்-ரவுண்டர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும், ஸ்பின்னர்கள் யுஜ்வேந்திர சஹால், ராகுல் சஹார் ஆகியோரும் அணிக்கு தேவை எனவும் சோதி தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சஹார், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா ஆகிய நான்கு பேரை ரிதீந்தர் சோதி தேர்வு செய்துள்ளார்.

ரிதீந்தர் சோதியின் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், முகமது சிராஜ், யுஜ்வேந்திர சஹால்.

Share Button