September 3, 2021 8:36 am

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும், அதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொவிட் தடுப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை கென்ய ஜனாதிபதி பாராட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், நாட்டின் மொத்த சனத்தொகையில் 70சதவீதமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமையானது ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும் எனவும் கென்ய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button