August 18, 2020 10:39 am

சவுதி வான்வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை – இஸ்ரேல் அறிவிப்பு

சவுதி அரேபியாவின் வான்பகுதி வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு ஆசியாவின் அரசியல் நீரோட்டத்தை பாலஸ்தீன பிரச்சினையில் இருந்து திருப்பி, ஈரானுக்கு எதிரான ஒன்றாக மாற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, கடந்த 70 ஆண்டுகளில் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தும் 3ஆவது அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது.

இரு நாட்டு உறவை வளர்க்க உள்ளதாக இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் கடந்த வாரம் அறிவித்தன.

இந்த நிலையில், சவுதி அரேபியாவின் வான்பகுதி வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விமானங்கள் தனது வான்வழியை பயன்படுத்தகூடாது என தடை விதித்துள்ள சவுதி அரேபியா, இந்தியாவுடனான தனது உறவை தொடர்ந்து டெல்லி-டெல்அவிவ் விமான போக்குவரத்திற்கு வான்வழியைப் பயன்படுத்த அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share Button