April 12, 2022 2:53 am

சன்ரைஸஸ் ஹைதரபாத் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி.!

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைஸஸ் ஹைதரபாத் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைஸஸ் ஹைதரபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 168 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சன்ரைஸஸ் ஹைதரபாத் 19.1 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் இலக்கை அடைந்தது.

Share Button