August 9, 2021 3:31 am

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்கள் அதற்கான சான்றிதழை வாட்ஸ்ஆப் செயலி வாயிலாகப் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கோவின் வலைதளத்தில் மக்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனா். இந்நிலையில், அச்சான்றிதழை வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெறுவதற்கான வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட சுட்டுரைப் பதிவில், ‘பொதுமக்களின் வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் மூலமாக புரட்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை 3 எளிய வழிமுறைகளைப் பின்பற்றி பெற முடியும்.

+91 9013151515 என்ற செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதையடுத்து, வாட்ஸ்ஆப் செயலி வாயிலாக அந்த எண்ணுக்கு தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். சில விநாடிகளில் கரோனா தடுப்பூசி சான்றிதழ் கிடைக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button