April 21, 2022 1:55 am

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க, ரஷ்யா, பெலரோஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ்போட்டிகள் வரும் ஜூன் இரண்டாம் வாரம் தொடங்குகின்றன. இப்போட்டி தொடர்களில் ரஷ்ய, வீரர்கள் பங்கேற்க அனுமதிக்ககூடாது என அனைத்து இங்கிலாந்து டென்னிஸ் கிளப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் புடினின் ஆதரவு பெலாரஸுக்கு இருப்பதால் அந்த நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் அனுமதி இருக்காது எனவும் கூறப்படுகிறது.

அதே நேரம் ஏ.டி.பி. மற்றும் டபிள்.யு.டி.ஏ., போன்ற சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் போட்டிகளில் ரஷ்ய வீரர்களும், பெலாரஸ் வீரர்களும் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டதாக தெரியவில்லை.

Share Button