March 27, 2014 6:12 pm

கடலில் 300 மிதக்கும் பொருட்கள்: மலேசிய விமான பாகங்களாக இருக்கலாம்

மலேசிய விமானம் விழுந்த தெற்கு இந்திய பெருங்கடலில் 300 பொருட்கள் மிதந்ததை தாய்லாந்து செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. காணாமல் போன மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்றும், அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்றும் மலேசியா பிரதம மந்திரி அறிவித்தார். இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் 122 பொருட்கள் மிதந்ததை பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் படம் எடுத்தது.

இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டு செயற்கைக்கோள் 6.5 முதல் 50 அடி நீளமுள்ள 300 பொருட்கள் தெற்கு இந்திய கடலில் மிதந்ததை படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்த பொருட்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கில் 2,700 கிமீ தொலைவில் மிதந்துள்ளன. இந்த பொருட்கள் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே தெற்கு இந்திய பெருங்கடலில் மோசமான வானிலை நிலவுவதால் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்கள் திரும்பிவிட்டன. கப்பல்கள் மட்டும் விமானத்தை தேடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share Button