July 26, 2014 11:11 am

கடற்கரை போர் நினைவு சின்னத்தில் கார்கில் வெற்றி நினைவு தினம் கொண்டாட்டம்

கடந்த 1999–ம் ஆண்டு மே 3–ந்தேதி பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் மாநிலம் கார்கில் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் எதிர்த்து போரிட்டு ஜூலை 26–ந்தேதி இந்திய பகுதியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அனைவரையும் விரட்டி அடித்தனர். ஆபரேசன் விஜய் என்ற பெயரில் நடந்த அந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. சிறப்பு வாய்ந்த இந்த கார்கில் போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்தது. 1,863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனால் பாகிஸ்தான் தரப்பில் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து கடந்த 1999–ம் ஆண்டு முதல் ஜூலை 26–ந்தேதி சார்பில் வெற்றி தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 15–வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் கார்கில் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் ஜெனரல் ஆபீசரான லெப்டினெட் ஜெனரல் ஜக்பீர்சிங் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு, புதுவை கடற்படை அதிகாரி (பொறுப்பு) கமாண்டர் மகாதேவன், தாம்பரம் விமானப்படை அதிகாரி குப்தா உள்ளிட்ட அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Share Button