August 21, 2022 6:35 am

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டிணைந்து கடிதம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம்

தற்போதைய நிலையில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையிலான வரைவொன்று தயாரிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், சிவில் சமூகத்தைச் சேர்ந்த அமைப்புக்களுக்கும் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேற்படி, வரைவின் உள்ளடக்கத்தில் மேலதிகமாக இணைத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஒவ்வொரு தரப்புக்களும் முன்வைக்கும் முன்மொழிவுகளை உள்ளீர்த்து இறுதி வடிவம் தயாரிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்புக்கள் உட்பட இதர சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கையொப்பமிடவுள்ளனர்.

அதன்பின்னரேயே, குறித்த கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

Share Button