April 26, 2022 2:45 am

உலகின் மிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் புத்தகத்தில் சாதனை ஏற்படுத்திய 119 வயது மூதாட்டி கேன் டனகா காலமானார்.

ஜப்பானை சேர்ந்த கேன் டனகா 1903ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பிறந்தார். இவர் தனது பெற்றோருக்கு 8 குழந்தைகளில் 7வது மகளாக பிறந்தார். இவருக்கு ஹிட்யு டனகா என்பவருடன் 1922ம் ஆண்டு திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தன.

 கடந்த 2019ம் ஆண்டு இவர் தனது 116 வயதில் உலகின் மிக வயதான பெண்மணி என்ற சாதனையை  படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். அதன் பிறகு 2020ம் ஆண்டிலும் மீண்டும் இதே சாதனை படைத்தார். இந்நிலையில் கேன் டனகா கடந்த 19ம் தேதி மரணமடைந்ததாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில்தான் அதிக வயது வரை வாழ்வோர் அதிகம் உள்ளனர். அதே போல் முதியோர் இல்லங்களும் அதிகளவு இருக்கின்றன.

Share Button