June 23, 2021 10:37 am

உலகின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மதிப்பை விட அதிக விலை கொண்ட விண்கல் கண்டுபிடிப்பு.!

நாசா விஞ்ஞானிகள் 16 சைக் என்ற ஒரு வகையான விண்கல்லை கண்டு பிடித்து அது குறித்து ஆய்வு செய்துவந்தனர். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைகழகத்தில் இந்த விண்கல் குறித்து ஆய்வு ஒன்று நடந்தது. அப்பொழுது இந்த விண்கல் எங்கிருந்து வந்திருக்கும் என ஆய்வு செய்த போது அது குறித்த பல ஆச்சரியமாக தவல்கள் வந்தன. அந்த விண்கல் எதனால் ஆனது என ஆய்வு செய்த போது அது மற்ற விண்கல் போல இல்லாமல் ஏதோ மிகப்பெரிய அழியாத பொருளில் சிறு துளியாக இருக்கலாம் என கருதினர்

இது குறித்து அந்த பல்கலைகழக மாணவர் டேவிட் கான்டிலோ என்பவர் ஆய்வு செய்து தி பிளானட்டரி சையின்ஸ் என்ற புத்தகத்தில் இது குறித்து ஆய்வு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் படி அவர் இந்த விண்கல் ஏதாவது ஒரு கிரகத்தின் துகளாக இருக்கலாம் ஆனால் இது சூரிய குடும்பம் தோன்றிய போதே ஏற்பட்ட கல்போல தெரியவில்லை. இந்த கல் 95 சதவீதம் உலோகங்களால் ஆனது, இரும்பு, நிக்கல், மற்றும் தங்கம் ஆகியவை இந்த கல்லில் நிறைந்துள்ளது.

அந்த 95 சதவீதத்தில் 82.5 சதவிதம் கனிம உலோகமாகவும், 7 சதவீதம் குறைந்து இரும்பு பைராக்ஸின் மற்றும் 10.5 சதவீதம் கார்போனாசியஸ் ஆகியவை கலந்திரப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விண்கல்லை மதிப்பிடும் போது ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மதிப்பைவிட இந்த கல்லில் உள்ள கனிம வளங்களின் மதிப்பு அதிகம் என தெரியவந்துள்ளது.

இந்த கல் குறித்து ஆய்வு செய்ய நாசா அதற்காக ஒரு விண்களத்தை தயார் செய்து அதை விண்ணிற்கு செலுத்தவுள்ளது. அது இந்த கல்லை ஆய்வு செய்து இந்த கல் குறித்த பல தகவல்களை பூமிக்கு அனுப்பும் அந்த தகவல்கள் எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Share Button