April 21, 2022 2:01 am

உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை, அந்நாட்டு அரசு துரிதப்படுத்தி வரும் நிலையில், வரும் நாட்களில் அந்நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.தீவிரம்தற்போது, நாட்டின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ரஷ்ய படைகள், அந்நகரில், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மரியுபோலில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு, அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ அறிவுறுத்தி உள்ளார்.சாதகம்உக்ரைன் வீரர்கள் நிலைகொண்டிருந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருவது, ரஷ்யாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

‘ரஷ்யா, விரைவில் மரியுபோல் நகரை எளிதாக கைப்பற்றிவிடும்’ என, சர்வதேச வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஐகோர் கோனாஷென்கோவ் நேற்று கூறுகையில், “உக்ரைனில், பீரங்கிகளை வைத்து, 1,053 இலக்குகளும், ஏவுகணைகளை வீசி, 73 இலக்குகளும் தகர்க்கப்பட்டுள்ளன,” என்றார்.

ரஷ்யாவின் அந்தஸ்து பறிப்புகிழக்காசிய நாடான ஜப்பானில், வர்த்தகம் செய்ய ஏதுவாக, ‘மிகவும் விரும்பப்படும் நாடு’ என்ற அந்தஸ்து, ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்துள்ள ஜப்பான், ரஷ்யாவிடம் இருந்த அந்த அந்தஸ்தை பறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

50 லட்சம் பேர் வெளியேற்றம் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் துவங்கியது முதல், ஏராளமான மக்கள், நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.இந்நிலையில், உக்ரைனில் இருந்து, 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறி உள்ளதாக, ஐ.நா.,வுக்கான அகதிகள் அமைப்பு நேற்று தெரிவித்து உள்ளது.

Share Button