March 17, 2022 2:46 am

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 26 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.

1996 ஆம் ஆண்டு ‘Wills‘ உலகக் கிண்ண வெற்றிக்குப் பின்னர் கிரிக்கெட் உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக  இலங்கை அணி இடம்பிடித்தமை யாவரும் அறிந்ததே.

1996 மார்ச் 17 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாளாக மாறியது.

1975  ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றவரும் உலகக் கிண்ணப் போட்டி இடம்பெற்றுவருகிறது.

இந்த உலக் கிண்ணத்தை இலங்கை அணி வென்று 26 வருடங்கள் ஆகிவிட்டன. இது இதுவரை இலங்கை அணிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த முதல் அங்கீகாரமாகும்.

பாகிஸ்தானின் கடாபி மைதானத்தில் நடைபெற்ற 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் மார்க் டெய்லர் தலைமையிலான பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை, அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தோற்கடித்திருந்தது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட இந்த உலகக் கிண்ண வெற்றியானது, அனைத்து இலங்கையர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றிய சந்தர்ப்பமாக குறிப்பிடலாம்.

Share Button