July 8, 2021 2:29 am

இன்று நடைபெறும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்.!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (08) மாலை இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்

Share Button