August 27, 2022 1:02 am

இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) விதித்திருந்த இடைக்காலத் தடையை சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) வெள்ளிக்கிழமை உடனடியாக நீக்கியது.

இதையடுத்து, 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டி திட்டமிட்டபடி அக்டோபரில் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது.

முன்னதாக, உரிய பதவிக்காலத்தைக் கடந்த வகையில் இந்திய சம்மேளன தலைவராக நீடித்து வந்த பிரஃபுல் படேலை கடந்த மே மாதம் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கிய உச்சநீதிமன்றம், சம்மேளன மேலாண்மைக்காக 3 நபா் நிா்வாகிகள் குழுவை அமைத்தது.

இதை அடுத்து, இந்திய கால்பந்து சம்மேளன நிா்வாகத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு இருப்பதாகக் கூறி, சம்மேளனத்துக்கு கடந்த 15 ஆம் திகதி ஃபிஃபா இடைக்காலத் தடை விதித்தது. இதனால், அக்டோபரில் திட்டமிடப்பட்டிருக்கும் மகளிா் உலகக் கிபோட்டியை இந்தியாவில் நடத்துவதும் சந்தேகத்துக்கு இடமானது.

பின்னா் இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. இதை அடுத்து நிா்வாகிகள் குழு அமைத்து பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் நீக்கியது. அதன் தொடா்ச்சியாக இந்திய சம்மேளனத்தின் மீதான தடையை உடனடியாக நீக்குவதாக ஃபிஃபா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

புதிய நிா்வாகிகளை தோ்வு செய்ய, சம்மேளன தோ்தல் வரும் செப்டம்பா் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Share Button