April 18, 2022 2:51 am

இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்வதாக அறிவிப்பு.!

சீனாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தோற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராத அளவில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. இங்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சீன அரசு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹாங்காங் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதில பாதிப்பு இல்லை என்று உறுதி செய்த பிறகே அவர்கள் ஹாங்காங் வர அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்வதற்கான விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அதேபோல் 19 மற்றும் 23-ம் தேதிகளில் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பும் விமான சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Share Button