September 26, 2022 2:22 am

இத்தாலி தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி பதவியேற்க உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர்.

இதன் காரணமாக, பெரும்பான்மை இல்லாததால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை இராஜினாமா செய்தார். 

இந்நிலையில், நேற்று பொதுத்தேர்தல் இடம் பெற்றது. அதில் ஜோர்ஜியா மெலோனி  தலைமையிலான பாசிச சிந்தனை கொண்ட பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் கூட்டணி வெற்றி பெற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியின் பாசிச அரசாங்கத்தை மெலோனி அமைப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய மெலோனி, தனது பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி அனைவருக்கும் ஆட்சி செய்யும் எனவும்  மக்களின் நம்பிக்கையை ஏமாற்றாது எனவும் தெரிவித்தார்.

மேலும், இத்தாலியின் பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி  தலைமையிலான வலதுசாரி அரசாங்கத்திற்கு ஆதரவாக இத்தாலியர்கள் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளனர்,” என தெரிவித்துள்ளார்.

Share Button