August 21, 2022 6:22 am

ஆசியக் கிண்ண டி20 போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணி பிரபல வீரர் ஷாஹீன் அப்ரிடி விலகியுள்ளார்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கிண்ண போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும்.

இந்திய அணி ஆசியக் கிண்ணத்தை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கிண்ண போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கிண்ண டி20 போட்டி நடைபெறுகிறது.

ஓகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஓகஸ்ட் 28 அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் காயம் காரணமாக ஆசியக் கிண்ண டி20 போட்டியில் இருந்து ஷாஹீன் அப்ரிடி விலகியுள்ளார்.

இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடியபோது ஷாஹீன் அப்ரிடிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் இன்னும் குணமாகாததால் ஆசியக் கிண்ண டி20 போட்டியில் மட்டுமல்லாமல் இங்கிலாந்துத் தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

இதற்கடுத்ததாக டி20 உலகக் கிண்ண போட்டிக்கு முன்பு நியூசிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியில் ஷாஹீன் அப்ரிடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share Button