May 7, 2022 1:21 am

அவசரகால சட்டத்தை இரத்து செய்யவேண்டும் எனசட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது

நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதனால், சமகால நிலைமைக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும்  எனஅறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது

இந்த நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு, அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது எனவே, அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

Share Button