September 22, 2021 4:35 am

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியசாலை தொகுதி நிர்மாணப் பணிகளை விலைமனுக்கோரலின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இது குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர்களான விமல் வீரவன்ஸ மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்த ஒப்பந்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில், ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த, இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அவர்கள் இன்றைய தினம் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Share Button