August 7, 2021 9:43 am

அமெரிக்காவின் மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு இரு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சகல வயதினரையும் உள்ளடக்கிய வகையில் 50 சதவீதமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதற்கமைய, 165 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் டெல்டா கொரோனா வைரஸ் திரிபின் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து, அமெரிக்கர்களிடத்தில் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், நியூயோர்க் மற்றும் லொஸ்ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவங்கள் மற்றும் பொது இடங்களுக்கு பிரவேசிப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button