July 26, 2014 10:09 am

பொது வேட்பாளராக ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்கத் திட்டம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ஷிரானி பண்டாரநாயக்கவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மாதுலுவே சோபித தேரர் தலைமையில் அண்மையில் கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளராக போட்டியிடக் கூடிய அடிப்படைத் தகமைகளை ஷிரானி பண்டாரநாயக்க கொண்டிருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு பேணாத பக்கச்சார்பற்ற ஓர் பொது வேட்பாளராக ஷிரானி பண்டாரநாயக்க கருதப்படுகின்றார். குற்றப் பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது முதல் இதுவரையில் ஷிரானி எந்தவொரு அரசியல் கூட்டத்திலும் பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்கத்கது.

எவ்வாறெனினும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களின் பெயர்களும் பொது வேட்பாளருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Share Button