May 14, 2022 1:22 am

500,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், அதனால் பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கும் என  500,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனயா மஹுதா ட்விட்டர் செய்தி ஊடாக தெரிவித்துள்ளார்.

இது இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான 30 வருட கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், இந்த 30 வருட காலத்திற்குள் நியூசிலாந்து இலங்கைக்கு 25.07 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி திட்டங்களுக்காக உதவியாக வழங்கியதாகவும் அவர் கூறினார்.

Share Button