April 27, 2022 4:20 am

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி இன்று ஆரம்பம்!

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி,  ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபல கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக்  கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு   இங்கிலாந்தைச் சேர்ந்த லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி அணிகளும், ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் , வில்லாரியல் அணிகளும் முன்னேறியுள்ளன.

அரையிறுதி ஆட்டங்கள் 2 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு அணியும் தங்கள் ஊரில் ஒருமுறை, எதிரணி ஊரில் ஒருமுறை என 2 ஆட்டங்களில் விளையாட வேண்டும். அதன்படி முதல் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை மான்செஸ்டர் சிட்டி-ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் ஆட்டம்  இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து  இன்று நள்ளிரவு (ஏப். 28 அதிகாலை) நடைபெற உள்ள ஆட்டத்தில்  லிவர்பூல்-வில்லாரியல் அணிகள் மோதுகின்றன. மேலும் 2வது சுற்று ஆட்டங்கள்  மே 4, 5 தேதிகளில் நடைபெறும். இறுதி ஆட்டம் மே 29ம் தேதி நடக்க உள்ளது.

Share Button