September 26, 2022 2:29 am

மறைந்த ராணி 2 ஆம் எலிசபெத் நினைவாக அவரது பெயரில் முதன் முறையாக இந்த ஆண்டு முதல் “ராணி எலிசபெத் II விருது “ வழங்கம் விழா லண்டனில் நடைபெறுகிறது.

அதில் “ஆண்டின் சிறந்த பெண்ணாக “ தேர்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார். இவருடைய பெற்றோர் அவர் சார்பாக விருதை பெற்றுக்கொண்டனர். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் , லண்டனில் வாழ்ந்துவரும் தமிழகத்தை சேர்ந்த உமா மற்றும் கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் தம்பதியருக்கு மகளாக பிறந்தவர் ஆவார். 

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக 42 வயதான சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டார்.

லண்டனில் நடந்த விழாவில் காணொளி முலம் பேசிய சுயெல்லா பிரேவர்மேன் , ஆசிய சாதனையாளர் விருதுகளை 2022விழாவில் , புதிய பாத்திரத்தை ஏற்பதை தன்  வாழ்நாள் பெருமையாக கருதுவதைாக அவர் தெரிவித்தார்.

இந்த உயரியவிருதை, மறைந்த இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்துக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். ஆசிய சாதனையாளர் விருது இப்பொது 20 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 

பிரிட்டனின் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Share Button