August 24, 2022 3:05 am

செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

சீனாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் வற்றி விட்டன. செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியான்ஜி மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற போயாங் ஏரியில் வழக்கமான கொள்ளளவை விட, 25 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

இதில் இருந்து சுற்றுப்புறத்தில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக விவசாயிகள் கால்வாய்களை தோண்டியுள்ளனர். ‘ட்ரோன்’ எனப்படும் ஆள் இல்லா உளவு விமானம் வாயிலாக கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், ஏரியிலிருந்து தோண்டப்பட்ட கால்வாய்கள், மரத்திலிருந்து பிரியும் கிளைகள் போல் அழகாக காட்சி அளிக்கின்றன.

Share Button