July 21, 2021 4:53 am

வேகன் ஹேர் டை .!

அம்மோனியா மற்றும் பிற கடுமையான பொருள்களை பயன்படுத்தாத கலரிங் முறை ஆகும். இது முடிக்கு நிறம் தருவதோடு முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கின்றன. வேகன் ஹேர் டை என்றால் என்ன? அதன் தயாரிப்புகள் மற்றும் அவை கூந்தலுக்கு தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

வேகன் ஹேர் டை என்பது முடிக்கு வேதிப்பொருள்களை பயன்படுத்தாமல் கலரிங் செய்வது. இதற்கு மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் கேரட் அல்லது பீட்ரூட் போன்ற காய்கறி பொருள்களால் தயாரிக்கப்படுகிறது. இது கூந்தலுக்கு சேதம் உண்டாக்காமல் தயாரிக்கப்படுகின்றன.

இந்த இயற்கை முடி சாயங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் மென்மையாக வைத்திருக்க செய்யும். இதன் பலன்கள் நிரந்தரமானவை. தலைமுடிக்கு வண்ணம் இருக்க அவ்வபோது வழக்கமாக இதை செய்ய வேண்டும்.

வேகன் ஹேர் டை வேதிப்பொருள்கள், விலங்குகளால் பெறப்பட்ட தயாரிப்புகள் இல்லாமல் தயாரிப்படுகின்றன. இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது. இது கூந்தலுக்கு நிறத்தை அளிப்பதோடு வேறு நன்மைகளையும் அளிக்கிறது.

காய்கறிகள் போன்ற இயற்கை பொருள்கள் பாதுகாப்பானவை. தலைமுடிக்கு வண்ணம் கொடுப்பதை தவிர அது உங்கள் மயிர் இழைகளை வலுப்படுத்தி சேதத்தை சரி செய்கின்றன. இந்த பொருள்கள் தலைமுடியை இயற்கையாக ஈரப்பதமாகவும், ஊட்டச்சத்துக்களால் கூந்தலை நிறைவாக வைக்கவும் செய்கின்றன

வழக்கமாக கூந்தலுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள் முடியை சேதப்படுத்தும். முடி உடைப்பு மற்றும் இழப்பை உண்டாக்கும். முடி பலவீனமாகி உடையக்கூடியதாகவும், வறண்டதாகவும் மாற்றும். ஆனால் வேகன் கலரிங் இவை எதையும் செய்யாது. ஹைட்ரஜன் பெராக்ஸடு, பாரபின்ஸ், அம்மோனியா போன்ற ரசாயனங்களிலிருந்து முடி சேதமடைவதை இவை தடுக்கின்றன.

வழக்கமான முடி சாயங்களில் உள்ள இரசாயனங்கள் கூந்தலுக்குள் ஊடுருவி கூந்தலை உள்ளே இருந்து கலரிங் செய்கிறது. இந்த வழியில் அவை முடியின் கட்டமைப்பை உடைப்பு சேதத்தை உண்டாக்குகிறது. ஆனால் வேகன் கலரிங் முடி சேதத்தை குறைகிறது.

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் அழகு பொருள்கள் பயன்படுத்துவதில் தடை சொல்லப்படுகிறது. ஆனால் வேகன் கலரிங் செய்வதன் மூலம் பாதுகாப்பாகவே இருக்கும். வழக்கமான முடி கலரிங் ரசாயனங்கள் வயிற்றில் இருக்கும் கருவை பாதிக்க வாய்ப்புண்டு என்று கர்ப்பிணிகள் நம்புகிறார்கள். அவர்களுக்கு இந்த வேகன் கலரிங் பயனளிக்கும். இது கர்ப்பகாலத்தில் பயன்படுத்த பாதுகாப்பானவையும் கூட.

வேகன் ஹேர் டை பயன்படுத்தும் போது கூந்தலில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. இதில் எண்ணெய்களை பயன்படுத்துவதால் கூந்தல் வறண்டு போகாமல் தடுக்கப்படுகிறது. வேகன் ஹேர் டை பயன்படுத்தும் போது முடி உதிர்வு குறைவாக இருக்கும். சிறந்த முடி மற்றும் பளபளப்பான தோற்றம் கிடைக்கும். கூந்தல் மென்மையாக இருக்கும்.

மேலும் இதில் இருக்கும் இயற்கை பொருள்கள் அரிக்கும் தோலழற்சி அல்லது அல்லது தடிப்புத்தோல் அழற்சி போன்ற உச்சந்தலை பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இது தற்காலிகமானவை. கூந்தலுக்கு சேதம் உண்டாக்காதவை.

குறிப்பு இதில் சேர்க்கும் கொட்டைகள் அல்லது சோயா சருமத்தில் சிலருக்கு எதிர்விளைவுகளை உண்டாக்கலாம். இதனால் சருமம் எரிச்சல், சிவத்தல், வீக்கம், அரிப்பு போன்றவற்றை உண்டாக்கலாம். ஒவ்வாமை இல்லாதவர்களுக்கு இது பாதுகாப்பானது.

மூன்று வகையான வேகன் ஹேர் டை கிடைக்கிறது. தாவர அடிப்படையிலான ஹேர் டை என்பது இலைகள், தண்டுகள், பட்டை, பழங்கள் அல்லது தாவரங்களின் காய்கறிகளில் தயாரிப்படுகின்றன. இவை பொதுவான மற்றும் பயனுள்ள சைவ தாவரங்கள் மற்றும் பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

மினரல் ஹேர் டை என்பது உப்பு மற்றும் இரும்பு போன்ற தாதுக்களால் தயாரிக்கப்படுகின்றன. இது முடியை இலேசாக மாற்றும் எனினும் இந்த சாயங்கள் அரிதானவை.

Share Button