July 7, 2021 11:23 am

நிறைய காபி குடிச்சா ஹார்ட் அட்டாக் வருமா, யாரெல்லாம் எச்சரிக்கையா இருக்கணும்?

காஃபின் அளவு அதிகமாக எடுத்துகொண்டால் அது கவலை மற்றும் தூக்க கலக்கத்தை உண்டாக்க கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. காஃபைன் சில நேரங்களில் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் சமயங்களில் போதைப்பொருளாக மாறும்.மோசமான விளைவுகளை உண்டாக்க கூடும் . அதிகப்படியான காஃபைன் நுகர்வு என்ன மாதிரியான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்பதை பார்க்கலாம்.

சில பெண்களுக்கு சிறுநீர் அடக்குதல் பிரச்சனை இருக்கலாம். இவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் சிரிக்கும் போதும் சிறுநீர்கசிவு ஏற்படும். இவர்கள் அதிகமாக காஃபின் நுகரும் போது இந்த பிரச்சனைகளை அதிகமாக்குகிறது. இவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கப் காஃபிக்கு மேல் எடுக்க வேண்டாம்.

காஃபைன் என்பது உடனடி பூஸ்டர் ஆகும். இது மந்தத்தை எதிர்த்து போராடும் எனர்ஜி பானம். எனினும் இதன் அளவு மற்றும் செயல் திறன் குறித்து அதிக சர்ச்சைகள் உண்டு.

காஃபைன் என்பதை மீதில் தியோப்ரோமைன் என்று அழைக்கிறார்கள். இது ஒரு ஆல்கலாய்டு ஆகும். இந்த இயற்கை பொருள் காஃபி, பீன்ஸ், தேநீர், கோலா கொட்டைகள் மற்றும் கொக்கோ பானங்கள் போன்றவற்றில் உள்ளது.

இது மருந்துகள், பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் காஃபி போன்றவற்றில் பரவலாக காணப்படுகிறது.நாம் தினசரி பயன்பாட்டில் காஃபியை தான் அதிகம் குடிக்கிறோம். அதனால் இதை எடுத்துகொள்ளும் அளவில் அதிக கவனம் இருக்க வேண்டும்.

ஆய்வின் படி காஃபின் என்பது உலகில் பரவலாகவே நுகரப்படுகிறது. இது தண்ணீரில் கரையக்கூடியது என்பதால், காஃபைன் உடனடியாக உடலில் உறிஞ்சப்படுகிறது. இது வயிற்றில் இருந்து மூளை வரை எந்த நேரத்திலும் நம் இரத்த ஓட்டத்தை அடைகிறது. அதிகமான இதன் நுகர்வு என்ன மாதிரியான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

காஃபைன் அதிகமாக உட்கொள்வது கவலையை தீவிரமாக தூண்டக்கூடும். மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஆராய்ந்ததில் அதிக அளவு காஃபின் உட்கொள்வது கவலை மற்றும் மன அழுத்த உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதை காட்டுகிறது.

பதட்டத்தன்மை கொண்டிருக்கும் ஒருவர் சாதாரண நிலையில் இருந்தாலும் அவர் காஃபி எடுத்துகொள்ளும் போது அது மோசமான நிலையை உண்டாக்குகிறது. இந்த அறிகுறிகளை அவர்கள் எதிர்கொண்டால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

காஃபினில் உள்ள அமிலங்கள் அதிக அமிலத்தை உற்பத்தி செய்ய வயிற்றை தூண்டுகின்றன. காஃபின் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் ஊக்குவிப்பதாக சொல்லப்படுகிறது. அதிகப்படியான காஃபின் குமட்டல், பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் போன்ற வயிற்று கோளாறுகளுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்புகள் சொல்கிறது.

பலவீனமான வயிறு இருந்தால் தினசரி அளவு காஃபி எடுத்துகொள்வது இரண்டு கப் அளவுக்கு மேல் எடுக்க வேண்டாம்.

தூக்கமின்மை என்பது ஒரு நரம்புக்கோளாறு. இந்த பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் தூங்குவது கடினம். அதிகரித்த சோர்வு, தலைவலி போன்ற பிற உடல் பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் தூக்கமின்மை அதிகமாக காஃபின் உட்கொள்பவரிடயே இருக்கும் ஒரு பொதுவான அறிகுறி.

படுக்கைக்கு முன்பு காஃபி எடுத்துகொள்வது தூக்கமின்மையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். இவர்கள் தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பு காஃப்இ எடுத்துகொள்ளலாம். தினசரி அளவை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.

கர்ப்பிணி பெண்கள் காஃபினுடன் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகப்படியான நுகர்வு கருச்சிதைவு மற்றும் பிரசவத்துக்கு முந்தைய சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

காஃபின் நீரில் கரையக்கூடியது மேலும் இரத்த ஓட்டம் வழியாக நஞ்சுக்கொடியை எளிதில் கடத்துகிறது இது ஒரு தூண்டுதல் என்பதால் இதயத்துடிப்பு மற்றும் கருவின் வளர்சிதை மாற்றத்தில் விரைவான அதிகரிப்பை உண்டாக்கும். அதிகப்படியான காஃபின் பக்கவிளைவுகளில் ஒன்று தாமதமான கருவின் வளர்ச்சி ஆகும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கப் காஃபிக்கு மேல் எடுத்துகொள்ள கூடாது. இது உடல் எரிச்சலை உண்டாக்குவது போன்று குழந்தையை நேரடியாக பாதிப்புக்குள்ளாக்கும். குழந்தையின் இரும்புச்சத்தை பாதிக்கலாம்.நாள் ஒன்றுக்கு 200 மி.கிராம் அளவுக்கு மேல் காஃபின் எடுக்க கூடாது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி உட்கொள்ளும் காஃபின் அளவு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காஃபின் அளவு இரத்த அழுத்தத்தை ஒரு தற்காலிகமாக அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. காஃபின் நீண்ட கால விளைவுகள் இல்லை ஆனால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை கொண்டவர்களில் இது மோசமான நிலையை உண்டாக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.

அதே நேரம் ஆய்வுகள் காஃபி எடுத்துகொள்வதால் அது உயர் இரத்த அழுத்தத்தோடு தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் சொல்கிறது. இது குறித்து இன்னும் ஆய்வுகள் தேவை.

நாள் ஒன்றுக்கு நான்கு கப் மேல் காஃபி எடுத்துகொள்ளும் இளவயதினர் உயர் இரத்த அழுத்தம் கொண்டிருந்தால் இரண்டு கப் குறைவாக உட்கொள்பவர்களை காட்டிலும் நான்கு மடங்கு மாரடைப்பு உண்டாகும் அபாயத்துக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று சொல்கிறது.

இது குறித்து தனியாகவே பார்க்கலாம். சுருக்கமாக காஃபின் அதிகமாக எடுக்கும் போது அது மாதவிடாய் சிக்கல்களை தூண்டலாம் இந்த காலங்களில் காஃபி குடிப்பது மாதவிடாய் சுழற்சியில் குறுகிடலாம். அதிகப்படியான ஓட்டம் மற்றும் தசைப்பிடிப்புகள் அதிகரிக்கலாம். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு காஃபின் வாசாமோட்டரின் வாய்ப்பு அதிகரிக்கிறது.

பெண்களின் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் காஃபி தலையிடுகிறது. அதிக அளவு காஃபின் கருவுறுதல் வாய்ப்பை குறைக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள். எனினும் இது குறித்து நம்பத்தகுந்த ஆய்வுகள் இல்லை என்பதும் கவனிக்க வேண்டும்.

நீர்க்கட்டிகள் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் நாள் ஒன்றுக்கு 500 மி.கிராம் மேல் அதிகமாக காஃபின் எடுத்துகொள்ளும் பெண்களுக்கு 31-250 மி.கிராம் காஃபின் அளவை எடுத்துகொள்பவர்களை காட்டிலும் மார்பக திசு நீர்க்கட்டிகள் உருவாக இரு மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்கிறது.

நாள் ஒன்றுக்கு அதிகமான காஃபி நுகர்வு முகப்பருவை உண்டாக்கலாம். மன அழுத்த ஹார்மோனை அதிகரிப்பதன் மூலம் உடலின் மன அழுத்த அளவை காஃபின் அதிகரிக்கிறது. இது முகப்பருவுக்கு முக்கியமான காரணங்களாகும். காஃபின் உடலின் சமநிலையை மாற்றி மன அழுத்தத்தின் இறுதியில் முகப்பருவை உண்டாக்கும்.

முகப்பருவை கொண்டிருப்பவர்கள் காஃபின் அளவில் கவனம் செலுத்த வேண்டும். அதோடு இது தோலில் கொலாஜான் உற்பத்தியின் திறனை தடுக்க முடியும்.

உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால் காஃபின் அளவு உட்கொள்ளலை கட்டுப்படுத்துவது நல்லது. இது குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

காஃபின் ஒவ்வாமை அசாதாரணமானது. வெகு சிலர் இதற்கு அதிக உணர்திறனை உருவாக்குவார்கள். இது தடிப்புகள், படை நோய், வலி ஒவ்வாமை நோய் அறிகுறிகளை உண்டாக்கும்.

இந்த எதிர்வினைகளை நீங்கள் கொண்டிருந்தால் உங்கள் காஃபினை தவிர்ப்பதோ அல்லது அளவை குறைப்பதோ நல்லது. ஒவ்வாமை தொடர்ந்து இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

காஃபினிலிருந்து முற்றிலும் விலக வேண்டும் என்று அர்த்தம் அல்ல. இது பக்கவிளைவுகளை உண்டாக்கும் அபாயம் கொண்டிருப்பதால் அளவாக எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மீறி எடுத்துகொள்வதும் நஞ்சு தான்

Share Button