May 23, 2019 9:44 pm

தமிழின மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களும், கொன்சவேடிவ் கட்சி கனடிய நாடாளுமன்றில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளும்.

தமிழின மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல் குறித்து கொன்சவேடிவ் கட்சி நாடாளுமன்றில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மார்க்கம் யூனியன்வில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பொப் சறோயா நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கனடிய கொன்சவேடிவ் கட்சி எப்பொழும் மனிதவுரிமை, மத சுதந்திரம், தனிநபர் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கு என்றும் முன்னுரிமை கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
2013ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் முன்னாள் பிரதமர் ஸ்ரீஃபன் ஹாப்பர் கலந்து கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், கடந்த 15ம் நாள் கனடிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோற்றுப் போனமை குறித்து தனது கருத்துப் பகிர்வை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
இலங்கையின் மனிதவுரிமை மீறல் தொடர்பில் ஃபெப்பரவரி 25ம் நாள் கொன்சவேடிவ் கட்சியால் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணை குறித்து விளக்கம் அளித்த பொப் சறோயா, கடந்த மே 15ம் நாள் ஸ்காபுறோ வடக்கு தொகுதி லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்  Shaun Chen     கொண்டுவரப்பட்ட பிரேரணையை விட அது காத்திரமானது என்று தனது கருத்தை பதிவு செய்தார்.
அத்துடன் மே 15ம் நாள் சஸ்கற்றூன் கொன்சவேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்  Garnett Genuis        ஆல் ஈழத்தமிழர் மீதான மனிதவுரிமை மீறல்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று என்ற பிரேரணை குறித்தும் பொப் சறோயா சுட்டிக்காட்டினார்.
எனினும் ஈழத்தமிழர் குறித்த மூன்று பிரேரரணைகளும் நாடாளுமன்றில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button