July 29, 2021 4:57 am

ஜப்பான் டோக்கியோ செல்வதற்கு எந்தவொரு அரச மற்றும் தனியார் நிறுவனமும் தனது செலவுகளுக்கு அனுசரனை வழங்கவில்லை – அமைச்சர் ரொஷான் ரணசிங்க.!

ஜப்பான் டோக்கியோ நகருக்கு செல்வதற்கான விமான டிக்கெட் மற்றும் ஜப்பானில் தங்கியிருக்கும் போது செலவிடும் நிதி அனைத்தும் தனது தனிப்பட்ட நிதி என்றும், எந்தவொரு அரச மற்றும் தனியார் நிறுவனமும் தனது செலவுகளுக்கு அனுசரனை வழங்கவில்லை எனவும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை பார்வையிட செல்வதற்கு இராஜாங்க அமைச்சர்கள் தனியார் நிறுவனங்களின் இணையனுசரனையுடன் சென்றுள்ளார்கள். என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் அடிப்படையற்றது. என உள்ளுராட்சிமன்றம் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இளைஞர் விவகாரம் மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் கலந்துக் கொண்டார்கள். உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு ஜப்பான் அரசாங்கம் மற்றும் வர்த்தக சமூகத்தினரது ஒத்துழைப்பினை  பெற்றுக் கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தையினை இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க முன்னெடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான  நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்தல், ஜப்பான் நாட்டினால் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்டம்  தொடர்பில் ஜப்பான் நாட்டின்  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button